சென்னை:

மிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நேற்று முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 1761 இடங்களில் 50 சதவிகிதம் மத்திய ஒதுக்கீட்டுக்கு போக மீத முள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று முதன் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,   மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணைப்படி கலந்தாய்வு நடந்தால், அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும் என்றும்,  எனவே கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதி மகாதேவன் முன்வு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலந்தாய்வு  தொடங்கிவிட்டதால், தற்போது கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியவர்,  தஅதே நேரத்தில் கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டார்.

இந்த  மனு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவக் கல்லூரி தேர்வுக்குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.