டில்லி:

த்தியஅரசால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட நமோ டிவிக்கு எதிராக ஆம்ஆத்மி தேர்தல் ஆணையத்தில் புகார் கூறி உள்ளது.

‘நமோ டிவி’ என்ற செய்திச் சேனலில், பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைகள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுவருகிறது. பாஜகவி ஊது குழாலாக உள்ள நமோ டிவி,  மோடியின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நேரடியாக வழங்கி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த ஆம்ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்துக்கு எழுதி உள்ள புகார் கடிதத்தில்,  மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவந்தபின்னர் ஒரு கட்சி சார்பாக இயங்கும் தொலைக்காட்சிக்கு, ஒளிபரப்பு உரிம அனுமதியை வழங்கமுடியுமா ? அவ்வாறு அனுமதி வழங்கப்படவில்லை எனில், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பாக இதுவரை என்ன நடவடிக்கை  எடுத்துள்ளது என்பதை தெரிவிக்கும்படி கேள்வி எழுப்பி உள்ளது.

ஏற்கனவே கடந்த  2012 ம் ஆண்டு குஜராத் தேர்தலின்போது மோடி நமோ டிவியை கொண்டு வர முயற்சித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலின்போதும் மோடி வந்தே குஜராத் என்ற பெயரில் ஒரு டிவி தொடங்க முற்பட்டபோது பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனையடுத்து தேர்தல் ஆணையம் அதனை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதும், நமோ டிவியை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.