டில்லி,
குறைந்த விலையில் உணவு தாணியங்களை போஸ்ட் ஆபீசில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்று மத்திய அரசே விற்பனை செய்ய முன்வந்தால், மாநிலங்களில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும்.
டெல்லியில் நேற்று நுகர்வோர் விவகார செயலாளர் ஹெம் பாண்டே தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
india_post
இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவு தானியங்களை அஞ்சல் அலுவலகங்க ளில் வைத்து விற்க முடிவு செய்யப்பட்டது.
இதுதவிர பண்டிகை காலங்களில் கையிருப்பில் உள்ள பருப்பு வகைகளை அதிகளவில் இருப்பு வைக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 500 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், தானியங்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படுவதாக வும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள், வேளாண்மை, உணவுத்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் இந்திய உலோகங்கள் மற்றும் கனிமங்கள் டிரேடிங் கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தபால் நிலையங்களில் இன்சூரன்ஸ், பேங்கிங் வசதி, விண்ணப்ப வினியோம் போன்ற பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. கோல்டு காயன் விற்பனை நடைபெற்று வருகிறது, அதன்பிறகு கங்கை தண்ணீர் பாட்டல் விற்பனை, தற்போது மளிகை பொருட்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
1-provision
தற்போது அனைத்து மாநிலங்களிலும் உணவு தானியங்கள் ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதற்கான மானியத்தை குறைத்து வரும் மத்திய அரசு, போஸ்ட் ஆபீஸ் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய முன்வந்திருப்பது அரசியல் விளையாட்டாகவே கருதப்படுகிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இதுபோன்ற சேவைகளை, மாநில அரசுகளிடம் இருந்து பறித்து,  மத்திய அரசு கையில் எடுப்பது , பொதுமக்களை கவர்வதற்காகவே என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்த செயல் அனுமதிக்கப்பட்டால் நாளடைவில் ரேசன் கடைகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.
கூடிய சீக்கிரம் போஸ்ட் ஆபீஸ் சூப்பர் மார்க்கெட்டாக மாறிவிடும் என தெரிகிறது.