பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவனை ராகிங் என்ற பெயரில் வெறித்தனமாக தாக்கிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாக்கிய இரு மாணவர்களும் சகோதரர்கள் ஆவர், ஒருவர் 12-ஆம் வகுப்பும் மற்றவர் 11-ஆம் வகுப்பும் படிக்கும் மாணவர்களாவர். இவர்கள் 12-ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவன் ஒருவனை மற்ற மாணவர்கள் முன்னிலையில் மிக கொடூரமாக அடிக்கும் வீடியோஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தவே அதிகாரிகள் உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தினர்.’
அதன் பின்னர் கேந்திர வித்யாலயாவின் முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் அந்த இரு மாணவர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இம்மாணவர்கள் இருவரும் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு தற்போது தலைமறைவாக இருக்கும் கிரிமினல் ஒருவனுடன் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.