வரும் டிசம்பர் 30-க்குப் பின்னர் பழைய தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வீட்டில் வைத்திருப்பது அபராதத்துக்குரிய குற்றமாக கருதப்படும் என்று செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தடை செய்யப்பட்ட 500, அல்லது 1000 ரூபாய் நோட்டுக்களை 10-க்கு மேல் வைத்திருப்பது இனி குற்றமாக கருதப்படும். இதற்கு தண்டனையாக ரூ.50,000 அல்லது வைத்திருக்கும் பணத்தின் 5 மடங்கு இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும். இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்குரிய கடைசி நாளாக வரும் டிசம்பர் 30-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது அறிந்ததே. எனவே வரும் டிசம்பர்-30 ஆம் தேதியையொட்டி செல்லாத நோட்டுக்கள் குறித்த அடுத்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
The government may bring in an ordinance to penalise those found holding “high amount” of junked Rs 500 and Rs 1,000 banknotes after December 30, the last date for depositing the scrapped currency in banks.