ராமசாமி படையாச்சியார் உருவப்படம்: தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது!

Must read

சென்னை:

மிழக சட்டமன்றத்தில் நேற்று ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் பஙகேற்றனர்.

2018ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின் போது, மறைந்த சுதந்திர போராட்ட வீரர்  ராமசாமி படையாச்சியார் பிறந்த செப்.14ந்தேதி  அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும்  ராமசாமி படையாச்சியார்  உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று (19ந்தேதி)  மாலை ராமசாமி படையாச்சி முழு உருவப் படத்தை சட்டப்பேரவை மண்டபத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். ராமசாமி படையாச்சியார் உருவப்படத்திற்கு கீழ் ‘வீரம்… தீரம்… தியாகம்’  என எழுதப்பட்டுள்ளது.

இந்த விழாவில், சபாநாயகர் தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

More articles

Latest article