சென்னை:

ணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாக கல்வி மாறி வருகிறது. அதை தடுக்க வேண்டி யது அரசுகளின் பொறுப்பு என்றும், ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன் வைக்கிறேன் என்று நடிகர் சூர்யா ஆவேசமாக அறிக்கை  வெளியிட்டு உள்ளார்.

கல்வியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று சில கட்சியினர் விமர்சித்த நிலையில், சூர்யா ஆவேசமாக பதில் தெரிவித்து உள்ளார்.

சமமான வாய்ப்பு மற்றும் தரமான கல்வி மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்தவன் நான் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை:

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது .ஆனால், தமிழக அரசோ,  மோடி அரசுக்கு ஆதரவாகவே கருத்துக்களை தெரிவித்து வருகிறது. தமிழகத்திலும்  புதிய கல்விக் கொள்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, பதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், இது அமல்படுத்தப்பட்டால் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என பேசியிருந்தார்.

சூர்யாவின் பேச்சு, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல அரசியல் கட்சியினர் மட்டு மின்றி, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், மத்திய மாநில அரசுகள், அதிமுக, பாஜக கட்சிகள்  அவரை கடுமையாக சாடின.

சூர்யாவின் பேச்சு தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில், கல்வியை பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற எதிர்கருத்து வந்தபோது ஏழை மாணவர்களின் கல்வி நலன் கருதி என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்கு கல்விதான் உயர பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்.

புதிய கல்விக் கொள்கையில் எல்லாவிதமான பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுவதாக இருக்கிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவு தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.

பணம் இருந்தால் விளையாடு என்ற சூதாட்டமாக கல்வி மாறிவிடக் கூடாது. சமமான தரமான இலவச கல்வியை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட மருத்துவ கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைகளை இணையத்தில் பதிவிட வேண்டும் என்றும்  பதிவிட்டுள்ளார்.