போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளதாகவும் வெண்டிலேட்டர் உதவி இனி தேவையில்லை என்றும் வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான சுவாச கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார்.

இரட்டை நிமோனியா தாக்குதல் இருப்பதாக அறிவித்த மருத்துவர்கள் அவர் சிறிதுகாலம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) நேற்று அகற்றப்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்னும் ஒரு சில தினங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை மருத்துவமனை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.