சென்னை:
சாலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படாத நிலையில், மதுரவாயல் முதல் வாலாஜாபாத் வரை உள்ள சுங்கச்சாவடிகளில் 50% கட்டணம் வசூலித்தான் என்ன? என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை வாயல் முதல் வாலாஜாபாத் வரை உள்ள நெடுஞ்சாலை சரியான முறையில் பராமரிக்கப்படாத நிலையில், அங்கு சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், முறையாக அமைக்கும் வரை 50 சதவீகித சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது? என கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக டிச.9க்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.