நாளை விநாயக சதுர்த்தி  – பூஜைக்கான நேரம் இதோ
பிள்ளையார் நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் ஆவார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம் உயிரோடு கலந்து உறவாடும் தெய்வம் பிள்ளையார். ‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் பழகி வரும் மொழிகள்..
மக்கள் எந்த  செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்குத் தேங்காய் அர்ப்பணிப்பது என்று  காரியங்கள் அனைத்தும் பிள்ளையாருடன் ஒட்டியதாகவே நடைபெற்று வருகின்றன. பிள்ளையாருக்கு வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு  உண்டு. உலகத்தில் பல நாடுகளில் பிள்ளையார் வழிபாடு காணப்படுகிறது.

ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி 25ம் தேதியான நாளை வெள்ளிக்கிழமை, செப்டம்பர் மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதில் நாடு முழுவதும் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம். இன்று விநாயகர் அவதரித்ததால் நாள் முழுவதும் மிக நல்ல நேரமாக இருந்தாலும், பூஜை செய்ய மிகவும் நல்ல நேரம் எது என்று பார்க்கலாம்..
நல்ல நேரம்
காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை