பிரபல தொகுப்பாளியினாக பணியாற்றிய பூஜா. தன்னுடன் பணியாற்றிய தொகுப்பாளர் கிரேக் என்பவரை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.
அதன்பின் நடிப்பதில் தீவிரம் காட்டிய பூஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். இந்த நிலையில், நடிகை பூஜா, நடிகர் ஜான் கொக்கைன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
‘கே.ஜி.எப்’ படத்தில் ஜான் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஜான் கொக்கைனும், பூஜாவுடன் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.