தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள்.
நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவில் சமந்தாவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இவர் எனக்கு அழகாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

அடுத்த சில நிமிடங்களிலேயே தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார் பூஜா ஹெக்டே.
மேலும், கடந்த ஒரு மணி நேரத்தில் என் கணக்கிலிருந்து பகிரப்பட்ட, இயக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நீக்கப்படுகின்றன என பதிவிட்டு சமந்தாவின் பதிவு நீக்கப்பட்டு இருந்தது.

எப்படி சில மணி நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, உடனடியாக சரியாகும் என்று சமந்தாவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள். மேலும் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #PoojaMustApologizeSamantha என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட்டாகி வருகிறது.
இந்நிலையில் சமந்தா தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்தார். சமீபகாலமாக தனது புகைப்படங்கள் எதையுமே ட்விட்டர் தளத்தில் பகிராமல் இருந்த சமந்தா, இன்று மட்டும் பகிர்ந்திருப்பது பூஜா ஹெக்டேவிற்கு பதிலடிக் கொடுக்கத்தான் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.