சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர் என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் சிங்காரவேலன்.

இந்த நிலையில் பிரபு திலக் என்கிற தயாரிப்பாளர், இதே இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில், சிபிராஜ், கௌதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இதே கதையை வால்டர் என்கிற தலைப்பிலேயே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சிங்காரவேலன் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது வால்டர் படம்