பொன்னம்மாள்

புதுக்கோட்டை:

யற்கை வளத்தை நாசமாக்கும் என்று கூறி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் பகுதியில் தொடர்ந்து 21வது நாளாக மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில்  பெண்கள், நெஞ்சில் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பொன்னம்மாள் என்பவர் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அவர்,  அருகே உள்ள மருத்துவமனக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது போராட்டக்கார்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, “மக்களுக்கான போராட்டத்துக்காக தனது உயிரை அளித்துள்ள பொன்னம்மாள்தான், இயற்கையைக் காக்கும்  எல்லைச்சாமி. அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வோம் வாருங்கள்” என்று வாட்ஸ் அப் மூலமாக பலர் அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

ஏற்கெனவே நெடுவாசல் பகுதியில் பெருந்திரளான மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்தது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பொன்னம்மாளின் இறுதிச் சடங்கில் கந்துகொள்ள சமூகவலைதளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து  மேலும் பலர் அந்த பகுதியில் குவிந்து வருகிறார்கள்.

தற்போது புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து நெடுவாசல் நோக்கி பலரும் செல்கிறார்கள் என்றும், மற்ற மாவட்டத்தில் இருந்து நாளை காலைக்குள் பெரும்பாலோர் திரள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.