சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி  பொதுமக்களின் வசதிக்காக மேலும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி  நகர்ப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள்  தங்களது சொந்த ஊர்களுக்குசெல்வார்கள். இதற்காக மாநில அரசு வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்குகிறது. அதுபோல ரயில்வேயும் ஏற்கனவே சில சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில்,  தற்போது மேலும் சில சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

அதன்படி,   நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில்கள் சென்னையில் இருந்து புறப்பட தயாராகி வரும் நிலையில், அனைத்து ரயில்களிலும்  இன்று முன்பதிவு தொடங்கி உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது,

சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி – சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. (ரயில் எண் 06151) ஜனவரி 12 மற்றும் 19 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ( ரயில் எண் 06152) ஜனவரி 13 மற்றும் 20 ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – தாம்பரம் – திருநெல்வேலி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ரயில் எண் 06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13 மற்றும் 20 ஆம் தேதி அன்று காலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதே நாள் பிற்பகல் 2.00 மணிக்கு தாம்பரத்தை சென்றடையவுள்ளது.

மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06057) தாம்பரத்தில் இருந்து அதே நாட்களில் பிற்பகல் 3.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 2.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் ஏசி பெட்டிகள், சாதாரண வகுப்பு சேர்கார் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போத்தனூர் – டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. (ரயில் எண் 06194,) ஜனவரி மாதம் 08 2026 அன்று இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

மறுமார்க்கத்தில் (ரயில் எண் 0619) ஜனவரி 09 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூரை அடையும் எனவும், இந்த ரயிலில் முழுவதும் ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – செங்கல்பட்டு – திருநெல்வேலி இடைலிலான சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. (ரயில் எண் 06154) திருநெல்வேலியில் இருந்து 14 ஜனவரி 2026 (புதன்கிழமை) காலை 3.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் ( ரயில் எண் 06153) செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை காலை 2.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – தாம்பரம் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. (ரயில் எண் 06166) ஜனவரி 12 மற்றும் 19 அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அதே நாள் பிற்பகல் 1.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் (ரயில் எண் 06165) தாம்பரத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையவுள்ளது.

இந்த ரயில்களில் ஏசி இரண்டாம், மூன்றாம் வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் பொது பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (08.01.2026) காலை 8.00 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]