புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பாக ரூ. 750 பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் என்.ரங்கசாமி அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொங்கலையொட்டி, ரேசன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் பணமும் வழங்கப்பட்ட வருவது கடந்த சில ஆண்டுகளாக  நடைபெற்று வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் பல்வேறு குறைபாடுகள் எழுவதாக புகார்கள்  மற்றும் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரியில், நடப்பாண்டு பொங்கல் பரிசா, தலா ஒரு ரேசன் அட்டைக்கு ரூ.750 வழங்கப்படும் என்றும், அதை  அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், அதில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக, அப்போதைய  ஆளுநர் கிரண்பேடிக்கும், காங்கிரஸ் மாநில அரசுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பொங்கலையொட்டி, மக்களக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு  பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணமாக செலுத்ததும்படி  உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு என்.ஆர் காங்கிரஸ், பாஜ கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப் பருப்பு, கடலை பருப்பு உட்பட 10 பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் 2023ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து,  நடப்பு ஆண்டு,  பொங்கல் தொகுப்பாக ரூ.750 ரேசன் அட்டைதாரர்கள் வங்கியில் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘பொங்கல் பண்டிகைக்கு பொருட்களுக்கு பதிலாக கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைபோல, இந்தாண்டும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ₹750 வங்கி கணக்கில் செலுத்தப்படும்’ என்றார்.