சென்னை:
தமிழகத்தில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான நிதி ரூ. 1677 கோடியை கூட்டுறவு வங்கியில் செலுத்தி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்தது.
அதன்படி, வரும் 9ந்தேதி முதல் 12ந்தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட உள்ள 1,000 ரூபாக்காக, ரூ. 1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்துள்ளது.
[youtube-feed feed=1]