சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு  ரயிலில் ஊருக்கு போக விரும்புபவர்கள் ரயில்கள் முன்பதிவு  செய்யும் வசதி செப்டம்பர் 12ந்தேதி தொடங்குகிறது.

நாடு முழுவதும் ரயில்களின் பிரயாணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி 3 மாதங்களுக்கு முன்பே தொடங்குகிறது. அதன்படி  வரும் 2024ம் ஆண்டு ஜனவரியில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு வரும் 12ந்தேதி முதல் தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகயை கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால், மத்திய, மாநில அரசுகள் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில், வழக்கமான செல்லும் ரயில்களின் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்னும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது.

அதன்படி,  ஜன. 10-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவா்கள் செப்.12 வியாழக்கிழமையும், ஜன. 11-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப். 13-ஆம் தேதியும், ஜன. 12-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புபவா்கள் செப். 14-ஆம் தேதியும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கள்கிழமை வருகிறது. அதேசமயம் ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்புவர்கள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். வழக்கம்போல் பண்டிகைகால ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும்.

ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம். அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.