சென்னை: 2023 பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

காவல்துறையில் 3000 பேருக்கும், தீயணைப்பு துறையில் 118 பேருக்கும், சிறைத்துறையில் 60 பேருக்கும், மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6 பேருக்கும் பொங்கல் திருநாளில் பதக்கம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி பிப்ரவரி 1 முதல் ரூ.400 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.