சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அரசுப் பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்ருதுள்ளதாக  போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. பயணி கள் அதிகரித்தால், மேலும்  தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் முடிவு  செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

பொக்ல் பண்டிகயையொட்டி, நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி,  தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதனப்டி, இந்த ஆண்டு,  யெடுப்பார்கள். இதனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பொங்கல் விடுமுறையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் பொது மக்கள் இடையூறின்றி பயணிக்கும் வகையில் சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

அதன்படி, ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,  பொங்கல் பண்டிகை முடிந்த பின் திரும்பி வருவதற்கு ஏதுவாக ஜனவரி 16-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 15,619 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக அமைச்சர் அறிவித்தார்.

அதுபோல பொதுமக்கள் வசதிக்காக, சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையங்களுக்கு செல்ல 24 மணி நேரமும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு பேருந்துகளில் பயணிக்க tnstc official app மற்றும் www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாகவும் பேருந்து நிலையங்களில் உள்ள கவுண்டர்களிலும் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான 12 இடங்களில் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, பூக்கடை மற்றும் மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை எனவும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.