சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி,  சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 77,392 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு  விடுமுறை தினங்கள், வார விடுமுறை, பண்டிகைகால விடுமுறை நாட்களில் பொதுமக்களின் தேவைக்காக வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. பண்டிகை காலத்திற்கு ஏற்றவாறு குறைந்தது ஆயிரம் முதல் பல ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், 2026 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டியும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில்,  சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 77,392 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

எத்தனை  சிறப்பு பேருந்துகள் ‘இயக்கப்படும் என அடுத்த வாரம்   அறிவிப்பு வெளியாகும் என்பதால், முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பண்டிகை முடிந்து ஊர் திரும்பவும் இதுவரை 58,124 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]