சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநிலம் முழுவதும் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் பாரம்பரியம் மிக்க  தமிழ் இனம்  நாளுக்கு நாள் மதுவுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகி இருக்கிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு  (2025) பொங்கல் பண்டிகையின் போது 4 நாட்கள் விடுமுறையில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்தசாதனையை இந்த ஆண்டு முறியடிக்கும் வகையில்,  கடந்த இரு நாட்களில் மட்டுமே ரூ.500 கோடியை தாண்டி மது விற்பனையாகி  இருக்கிறது. மேலும்,  மாட்டுப்பொங்கல் மற்றும் காணும்  பொங்கல் விற்பனையையும் சேர்ந்தால் விற்பனை ரூ.800 கோடியை தாண்டும் எதிர்பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 14ந்தேதி டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கும், 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.  சென்னை மண்டல டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.98 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

 

[youtube-feed feed=1]