சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் முன்பு தொடங்குவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்து உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சென்னை மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் பணி நிமித்தமாக தங்கியுள்ளவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதைத்தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை முதல் தொடக்குவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது. புறநகரில் பணியில் உள்ளவர்கள், பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்பதால் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகையின்போது தமிழகஅரசு 4,950 சிறப்பு பேருந்துகளை இயக்கியது குறிப்பிடத்தக்கது.