சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 4 மணி நேர 310 இணைப்பு பேருந்துகள்இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், தமிழகஅரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்து உள்ளது. அதன்படி இன்று முதல் 13ந்தேதி வரை   10,228 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று மட்டும் (11ம் தேதி)  2,226 பேருந்துகளும், நாளை (12ம் தேதி)  ,000 பேருந்துகளும், 13ம் தேதி (நாளை மறுதினம்)  4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இநத நிலையில், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் இன்று மதியம் (11ந்தேதி) முதல் 13ந்தேதி வரை சென்னையில் 24 மணி நேர 310 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துத் துறை அறிவித்து உள்ளது.