சென்னை: சென்னையிலிருந்து நேற்று வெளியூர்களுக்கு சென்ற பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கலையொட்டி, தமிழகஅரசின் போக்குவரத்து துறை 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12ந்தேதி 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முதல்நாளான நேற்று (12ந்தேதி) சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 586 பேருந்துகள் என மொத்தம் 2,686 பேருந்துகளில் 1,34,300 பேர் பயணித்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.