சென்னை
பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்,
சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறியது. எனவே பொன்முடி அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார்.
உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்தில் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த அறிவிப்பு திரும்பப்பெறப்படுமா? பொன்முடிக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானதை அடுத்து, அதனைச் சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கப்பட்ட உடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படும். அதன்பின்னர் விரைவில் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் என்னும் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் கூறுகின்றன.