சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக பொன்.குமார் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியை நடத்தி வருபவர் பொன்.குமார்.  இவர் தமிழக கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொன்குமார் கட்சி, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பொன்.குமாருக்கு தமிழ்நாடு அரசு வாரியத் தலைவர் பதவி கொடுத்து கவுரவித்து உள்ளது.

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு பொன்.குமாரை தலைவராக  நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் நல ஆணையம், தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்திருந்தது. அதையடுத்து,  தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்திற்கு பொன் குமாரை தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் நல ஆணையர், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர், வீட்டு வசதித் துறைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட எட்டு நபர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.