நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை யதார்த்தமாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது ஸ்நேகனின் ‘பொம்மிவீரன்’.

உழவன் திரைக்களம் தயாரித்துள்ள இந்த படத்தை ரமேஷ் மகாராஜன் இயக்கி வருகிறார். தாஜ் நூர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சினேகன் கேரளாவின் தையம் கலையின் உடையை அவர் அணிந்துள்ளார்.

[youtube-feed feed=1]