சென்னை: பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி த தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இம்மாதம் 6ம்தேதி முதல், சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று  உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம் நடை பெற்றது.  உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வெளியிட்டனர்.

நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சரின் இரு கண்களாக இருப்பது கல்வியும், சுகாதாரமும். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த 6 லட்சம் மாணவிகளின் உயர்கல்விக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும், 16 கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி முயற்சிகளை மேம்படுத்த 11 மையங்கள் உருவாக உள்ளது, 10 அரசு கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதி அளிக்கப்படும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளே இல்லாத சட்டமன்ற தொகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கி, புதிய கல்லூரிகளைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ,

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் , பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேரலாம்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பயிலும் சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்

அரசு பொறியியல் கல்லூரிகளில் அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கும் மையங்கள் உருவாக்கப்படும் 

உள்பட பல புதிய அறிவிப்புகளை அறிவித்தார்