அபுதாபி: மும்பை அணியின் சகோதர வீரர்களான ஹர்திக் மற்றும் கர்ணால் பாண்ட்யா சகோதரர்களைப் புகழ்ந்து தள்ளியுள்ளார் அந்த அணியின் சக வீரர் பொல்லார்டு.
அவர் கூறியுள்ளதாவது, “எங்கள் மூவரின் உணர்வுகளும் ஒரேமாதிரியானவை. நாங்கள் வெளியில் வேடிக்கையாக இருந்தாலும், களத்தில் இறங்கிவிட்டால் சீரியஸாக மாறிவிடுவோம். எங்கள் இடையிலான புரிதல் சிறப்பானது.
எங்கள் மூவருக்கிடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் ஒருவவொருக்கொருவர் உதவி நினைக்கிறோம். ஒவ்வொரு தருணமும் எங்களுக்கு மகிழ்ச்சியானது. எங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பிற்காக நாங்கள் நன்றியுடன் உள்ளோம்.
பாண்ட்யா சகோதரர்கள் இருவருமே வியக்கத்தக்கவர்கள் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். மொத்தத்தில் நல்ல மனிதர்கள். எங்களுக்குள் நல்ல மரியாதையும் புரிதலும் உள்ளது” என்றுள்ளார் அவர்.