கோவை:
தமிழகத்தையே குலைநடுங்க வைத்துள்ளது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான வீடியோக்கள். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவனின் வீட்டின் கதவுகளை உடைக்கப்பட்டுள்ளன.
இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கும் நிலையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்புடைய ஆவனங்கள் திருட்டு போயிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட குடும்ப பெண்களை, சமூக வலைதளம் மூலம் நட்பை ஏற்படுத்தி, அவர்களை தனியாக வரச்செய்து, கடத்தி, பின்னர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது ஒரு கும்பல். இந்த கும்பலில் 20பேர் வரை இருக்கலாம் என கூறப்படும் நிலையில், 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த பாலியல் வன்கொடுமையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடானது பொள்ளாச்சியின் சின்னப்பம்பாளையத்தில் உள்ளது. பாலியல் சம்பவம் வெளியான நிலையில் திருநாவுக்கரசு குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர். இந்த நிலையில், அவரது வீட்டின் கதவுகளை உடைக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநாவுக்கரசின் இந்த வீட்டில்தான் பாலியல் தொடர்பான சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக கூறப்படும் நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்குள்ள வீடியோ உபகரணங்கள் உள்பட ஆவனங்களை திருடிச் சென்றிருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த கொடூர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரப்பட்டு வரும் நிலையில், உண்மைகள் வெளிவராமல் தடுக்கும் நோக்கிலேய, அவரது வீட்டை உடைத்து சாட்சியங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி காவல் துறையினர் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி கொடுர சம்பவத்தில் அரசியல் கட்சியினர் பெயர்களும் அடிபடுகின்றன. இந்த நிலையில், திருநாவுக்கரசின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.