கோவை:

நெஞ்சை பதற வைக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு கொடுத்த இளம்பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில், ஒரேநாளில் ஜாமினில் வெளிவந்த பார் நாகராஜ் என்ற முன்னாள் அதிமுக அம்மா பேரவை செயலாளர், கைது செய்யப்படலாம் என்ற நிலையில், தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிழகத்தை உலுக்கி வரும் பொள்ளாச்சி பாலியம் சம்பவம் தொடர்பாக, புகார் கொடுத்த ஒருவரை அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜ் தாக்கிய நிலையில், தற்போது அவர் ஒரு இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ஜாமினில் உள்ள நாகராஜ், கைது செய்யப்படுவாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இளம்பெண்களை மிரட்‌டி ஆபாசமாக படமெடுத்த‌ வழக்கில், பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக் கரசு உள்பட நால்‌வர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி கையில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத் தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பார் நா‌கராஜ், பெண்‌ ஒருவருடன் இருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி அம்மா பேரவை செயலாளராக பொறுப்பு வகித்த நாகராஜ், தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.  இவர், பாலியல் சம்பவம் தொடர்பாக  பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் சகோதரா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததற்காக, அவரை தாக்கிய நிலையில், கைது செய்யப்பட்ட நாகராஜ் உடனே ஜாமினில் வெளியே வந்து விட்டார்.

இந்த நிலையில்,   அவர் தொடர்புடைய வீடியோவும் வெளியாகி உள்ளது. ஆனார், இது தொடர்பாக  பார் நாகராஜ் மீது காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்யாமல் பாரபட்சம் காட்டி வருகின்றனர்.  இது மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாா் நாகராஜை உடனடியாக கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி என்று ஆா்வலா்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

இந்த வழக்கில் ஆளும் கட்சியினரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை அரசியல் தலைவா்கள் மறுத்தனா். ஆனால் தற்போது நாகராஜின் வீடியோ வெளியான தால் இந்த விவகாரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு நிச்சயம் தொடா்பு இருக்கும் என்று பொது மக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

இதன் காரணமாக பார் நாகராஜ் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பார் நாகராஜ் தலைமறைவாகி உள்ளதாகவும், சென்னையில் அமைச்சர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

ஜாமீனில் ‌உள்ள நாகராஜை காவல்துறையினர் விரைவில் கைது செய்து விசாரணை செய்வார்கள் என‌ எதிர்பார்க்கப்படுகிறது‌.