டைபெறவிருக்கும்  மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகளை விட சிறுபான்மை  மக்கள் வாக்குகளைத்தான் மலைபோல் நம்புகிறது- தி.மு.க.

ஏனென்றால்- கன்னியாகுமரி , தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், வேலூர், கோவை , மத்திய சென்னை உள்ளிட்ட 10 தொகுதிகளில் சிறுபான்மையினர் ஒட்டுகள்தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

கடந்த தேர்தலில் ‘’மோடியா? லேடியா?’’ என பா.ஜ.க.வுக்கு சவால் விட்டு தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மை வாக்குகளை அள்ளிக்கொண்டார் ஜெயலலிதா. இதனால் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க.ஜெயிக்க- அத்தனை இடங்களிலும் தி.மு.க. படுதோல்வி அடைந்தது.

இந்த முறை பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருப்பதால் –சிறுபான்மை ஓட்டுகள் தங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் என்று கணக்கு போட்டது- தி.மு.க.

try to join with ttv.. dmk shock

ஆனால் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் –சிறுபான்மை சமூக வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.

ஏற்கனவே இஸ்லாமிய ‘பாக்கெட்’டுகளில் ஓரளவு வாக்குகளை வைத்துள்ள எஸ்.டி.பி.ஐ.கட்சி, தினகரன் கட்சியில் சேர்ந்துள்ளது.

இந்த நிலையில்-

முஸ்லீம்களிடம் கணிசமான ஆதரவை பெற்றுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் – அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளது.

ஏற்கனவே ம.ம.க.வுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காதது- இஸ்லாமியர்கள் நிறைந்த வேலூர் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்காதது போன்ற காரணங்களால்-அந்த சமுதாய மக்கள் தி.மு.க.மீது அதிருப்தியில் உள்ளனர்.

இந்த சூழலில்- இஸ்லாமிய இயக்கங்களின் ஆதரவை டி.டி.வி.தினகரன் பெற்று வருவது தி.மு.க.வுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சொற்ப மெஜாரிட்டி கிடைத்து மேலும்  சில எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில்-மோடி ஆட்சி அமைக்க தி.மு.க.உதவலாம் என்கிற கருத்து பரவலாக பேசப்படுகிறது.

இதனால் சிறுபான்மையினர் வாக்கு இந்த தேர்தலில் யாருக்கு என்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில்-

டி.டி.வி.தினகரன் பக்கம் –இஸ்லாமிய அமைப்புகள் நெருங்குவது – தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

-பாப்பாங்குளம் பாரதி

.