பொள்ளாச்சி பாலியல் விசாரணை தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உத்தரவு: தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் குட்டு

சென்னை:

பொள்ளாச்சி பாலியல் விசாரணை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம்,  புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

நெஞ்சை  பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து, அதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி  நேற்று தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது.அ ஆனால், அரசாணையில் விதிகளை மீறி,  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படித்த கல்லூரி , சகோதரர் பெயருடன் அவர்களது குடும்பத்தினர் பெயர்களையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருச்சியைச் சேர்ந்த முகில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அவசர வழக்கு தொடர்ந்தார். வழக்கை   விசாரித்த உயர் நீதிமன்றக்கிளை, தமிழக அரசின் அரசாணை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை தெரிவிப்பதா என தமிழக அரசை கடுமையாக கடிந்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகைப்படம், ஆடியோ, வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றவர்களுக்கு பகிர்வதும் குற்றம் என்றும், பொள்ளாச்சி பாலியல் மிரட்டல் வீடியோக்களை சமூக ஊடகங்களில் அனுப்பவும்  தடைவித்தித்து. 

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த நீதிபதிகள்,  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், படித்த கல்லூரி , சகோதரர் பெயருடன் வெளி யிடப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு, பெயர் இல்லாமல் புதிய ஆணை வெளியிட தமிழ அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: High court madurai, New GO, Pollachi sexual harrasment, PollachiAbuse, PollachiCase, TN Govt, TN Govt GO Cancelled
-=-