கோவை:
பொள்ளாச்சி பகுதியில், சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி வந்த கும்பலின் தலைவன் என்று கூறப்பட்ட திருநாவுக்கரசு என்பவர் கைது செய்யப்பட்டார்.
தனது செயலுக்கு உடந்தையாக பல முக்கிய நபர்கள் இருந்ததாக, ஆடியோ மூலம் திருநாவுக்கரசு தெரிவித்திருந்த நிலையில், அந்த முக்கிய நபர் யார் என்பது குறித்து, அவரிடம் விசாரணை நடத்தி காவல்துறை அறிவிக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக் கின்றனர்.
கடந்த மாதம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு சிக்கியுள்ளானர். இவன் மற்றும் அவனது நண்பர்கள் சிலர் பேஸ்புக் வலைதளம் மூலம் இளம்பெண் களிடம் நண்பர்க ளாகப் பேசி பழகி, நேரில் வரச்சொல்லி அவர்களை கடத்திய் பாலியல் தொந்தரவு செய்து, அதை போட்டோ எடுத்தும், அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணமும் மிரட்டி வாங்கியுள்ளனர்.
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து பேஸ்புகல் வலைதளம் மூலம் இளம்பெண்கள் உள்பட வசதியாக பெண்களுக்கு வலைவீசி அவர்களை மயக்கி, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்தனர். இந்த ஆபாச படக்கூட்டத்தின் தலைவன் திருநாவுக்கரசு.
இந்த குமபத்தில் சமீபத்தில் ஒரு இளம்பெண்ணை பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம் பட்டி பகுதிக்கு வரவழைத்து, நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்..பின்னர், மொபைல் போனில் எடுக்கப்பட்ட ஆபாச புகைப் படங்களைக் காட்டி மாணவியைமிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகைப்படத்தை மாணவியிடம் காட்டி பாலியல் உறவுக்கு இணங்குமாறும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, அந்த இளம்பெண் கூச்சலிட, அவரிடம் இருந்து நகையை பறித்துக்கொண்டு, அவரை மிரட்டிவிட்டு, தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும், அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் இல்லையென்றால், மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில்அப்லோடு செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அந்த இளம்பெண் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து ரகசியமாக தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சபரி, வசந்த்குமார், சதீஸ்குமார் ஆகிய மூவரையும் ஜோதிநகர் பகுதியில் காருடன் கைது செய்தனர். ஆனால், திருநாவுக்கரசு தப்பி ஓடிவிட்டார். அவனை தேடி வந்தனர்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கல்லூரியில் படிக்கும் பெண்கள், பள்ளிக்கூடம் செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பாகுபாடு இல்லாமல் நிறையப் பெண்களை இந்த கும்பல் மிரட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கும்பல் பெண்களைக் குறிவைத்து இயங்கி வந்துள்ளது. அவர்களிடம் சாதாரண பெண்கள் உள்பட பல பணக்கார பெண்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இது தொடர்பான வழக்கை இழுத்து மூடி காவல்துறை முயற்சிப்பதாக கூறி பொள்ளாச்சி பகுதி மக்கள் மற்றும் எதிர்க்கட்சி யினர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், முக்கிய குற்றவாளியான, தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைப் பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வந்தனர்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதாக திருநாவுக்கரசு ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தான். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு செய்யப்பட்டார். பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியில் மறைந்திருந்த திருநாவுக்கரசுவை போலீசார் கைது செய்தனர். திருநாவுக்கரசிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் ஆடியோவில் கூறியபடி, தனது கீழ்த்தரமான செயலுக்கு உறுதுணையாக இருந்த முக்கிய நபர் யார் என்பதை தெரிவிப்பாரா என்று அந்த பகுதி மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.