டில்லி:
ஆஸ்ரம சொத்துக்களை அபகரிக்க அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது.
ரெயில், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாமியாரின் சொத்துக்களை முடக்கி சேதத்தை ஈடு செய்துகொள்ளுமாறு மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாஜ மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘‘ சாதுக்களுக்கு தற்போது புதிய மிரட்டல் வந்துள்ளது. அரசியல்வாதிகளும். ஆஸ்ரமங்களுக்கு எதிரானவர்களும் சேர்ந்து ஆஸ்ரம சொத்தக்களை அபகரிக்க சாமியார்களை சிறைக்கு அனுப்புகின்றனர்.
இந்த நிலையை போக்க சாதுக்கள் கண்டிப்பாக தங்களது வாரிசுகளை உருவாக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.