சென்னை
மகாராஷ்டிரா மாநில ஆளுனரே தமிழ்நாட்டையும் கவனிப்பது மாறி தமிழ்நாட்டுக்கு என ஒரு தனி ஆளுனர் என்று வருவார் என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பம் குறித்தும் முழு நேர ஆளுநரின் தேவை அரசியல் நோக்கர்கள் தெரிவிப்பதாவது :
ஒரு வருடத்துக்கு மேலாகியும் தமிழ்நாட்டுக்கு என ஒரு ஆளுனர் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்டிரா ஆளுனர் வித்யாசாகர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டையும் கவனித்து வருகிறார். அவர் பல நேரங்களில் தமிழ்நாட்டில் இருப்பதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பொறுப்பு அ தி மு க இரு அணிகளுக்கிடையே பந்தாடப்பட்டது தெரிந்ததே. தற்போது இரு அணிகளையும் ஆளுனர் இணைத்து வைத்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் தற்போது தினகரன் அணி என இன்னொரு அணி உருவாகி உள்ளது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மூன்று அணிகள் ஆளுனரிடம் மனு அளித்துள்ளன. ஆனால் ஆளுனர் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சென்று விட்டார்.
அ தி முக வின் தினகரன் அணி, தி முக அணி, மற்றும் காங்கிரஸ் அணி என மூவரும் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என மனு அளித்த நிலையில் அது பற்றி எந்த முடிவும் வித்யாசாகர் எடுக்கவில்லை. தினகரன் அணியைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள் தற்போது புதுச்சேரியில் தங்கி உள்ளனர். குதிரைப் பேரம் நிச்சயம் நடக்கும் என்பது பலருக்கும் தெரிகின்றது.
ஆனால் இந்நிலையில் முடிவெடுக்க வேண்டிய ஆளுனர் இங்கில்லை. மத்தியில் ஆளும் பா ஜ க அரசு விரும்பவில்லை என தெரிகிறது. அப்படி இருக்க ஒரு முழு நேர ஆளுனரை ஒரு வருடமாகியும் நியமிக்காதது ஏன்? தமிழ்நாட்டுக்கு என ஒரு தனி ஆளுனர் என்று வருவார்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை யாருக்கும் தெரியவில்லை
இவ்வாறு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.