சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸின் நடவடிக்கை, அவர் ஒரு தேர்ந்த ‘அரசியல் பச்சோந்தி ‘ என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
2021ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து 5 தொகுதிகளை கைப்பற்றிய பாமக, மீண்டும் தனது சந்தர்ப்பவாத அரசியலை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் அரசியல் பஞ்சோந்தியாக அணி மாறி வெற்றிக்கனியை ருசிக்கும் பாமக, மீண்டும் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டி வருகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தனித்துப்போட்டியிடுவதாக பாமக அறிவித்து உள்ளது. கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாமகவின் அறிவிப்பு காரணமாக அதிமுகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்பது உறுதியாகி உள்ளது.
தேர்தலுக்கு தேர்தல் காட்சிகளை மாற்றும் பாமக, 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலில்கூட, பெரும்பாலான பாமக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறி வந்தும், அதை ஏற்றுக்கொள்ளாமல், தனது மகன் எம்.பி.யாக வேண்டும் என்ற பாசத்தின் காரணமாகவே, ‘டயர் நக்கி’ அதிகமுவுடன் இணைந்து, தேர்தலை எதிர்கொண்டு, பதவி சுகத்தையும் பெற்றது.
ஆனால், தற்போது மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுகவின் காலடியில் விழுந்தது. அதற்கேற்றார்போல, முதலமைச்சர் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு, மணி மண்டபம் என அடுத்தடுத்து பல்வேறு அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இனிமேல் அரசியல் செய்ய வேண்டுமென்றால் திமுகவின் தயவு தேவை என தெரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. இதனால், பாமக விரைவில் அணி மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. அது தற்போது நடந்தேறி உள்ளது.
மூன்றே மாதத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த வெளியேறி பாமக மீண்டும் பச்சோந்தி தனத்தை வெளிக்காட்டியுள்ளது. பாமகவின் இதுபோன்ற செயல்கள் அரசியல் வேசித்தனம் என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மீள் பதிவு:
அதிமுகவை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ், நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைப்பவர் என்று தமிழ்க வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதை உறுதிப்படுத்தி வருகிறது பாமக தலைவரின் அரசியல் நடவடிக்கைகள்.
அதிமுகவை டயர்நக்கி கட்சி என்று கடுமையாக விமர்சித்த ராமதாஸ்தான், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். வன்னியர்களின் கோட்டை என கூறப்படும் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்று மண்ணை கவ்வினார்.
இருந்தாலும், தனது மகனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி அழகு பார்க்க நினைத்த ராமதாசின் பேராசை, டயர்நக்கி என்று விமர்சித்த அதிமுகவிடம் மடிப்பிச்சையேந்த வைத்தது. அதிமுகவின் தயவினால், தனது மகனை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார்.
அதுபோல 2021 மார்ச்சில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. இந்த தேர்தலில் அதிமுகவிடம் விடாப்படியாக 23 தொகுதிகளைப் பெற்று களத்தில் இறங்கிய பாமக வெறும் 5 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அதுவும், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் வாக்குகளால்தான் அவர்களின் வெற்றி இறுதியானது என்பது அனைவரும் அறிந்ததே.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கைப்பற்றி, தனது முதல் பட்ஜெட்டை 13ந்தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பல்வேறு சலுகைகள், அறிவிப்புகள் என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் வெளியாகி உள்ள பட்ஜெட்டை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், இதுகுறித்து கருத்து தெரிவித்த பாமக தலைவர் ராமதாஸ்,
பட்ஜெட்டில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று விமர்சித்தவர், எதிர்கட்சியாக அதிமுக இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அதிமுகவின் தலையிலும் குட்டினார். அவரது சூசகமான பேட்டி, அவர் மீண்டும் பஞ்சோந்தியாக மாறப்போகிறார் என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே இருந்தது.
அதை நிருபிக்கும் வகையில், அடுத்த சில நிமிடங்களில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாமகவின் இலக்கு என்று கூறியதுடன், அதற்கு தயாராகும் வகையில் அடுத்த வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமு.கவுடன் கூட்டணி இருக்காது என்று ஒரே போடுபோட்டு, தனது சுயரூபத்தை மீண்டும் காட்டினார். மேலும், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு மாற்றம், முன்னேற்றம், அன்புமணிதான் இலக்கு என்றும் தெரிவித்தார்.
பாமக ராமதாசின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், பாமகவின் நிலைப்பாடி இப்படித்தான் இருக்கும் என்று அவரது அரசியல் குறித்து அறிந்த அரசியல் ஆய்வாளர்களும், விமர்சகர்களும் தெரிவித்துள்ளனர்.
பாமக தொடங்கியது முதல்அதன் தலைவர் ராமதாசின் ‘பஞ்சோந்தி அரசியல்’ எப்படி இருந்து வருகிறது என்பதை சற்றே விரிவாக காணலாம்…
வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி – வேலைவாய்ப்பில் `தனி இட ஒதுக்கீடு’ வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் தனது குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வர மாட்டடார்கள், பதவி சுகம் தேடமாட்டார்கள், தனது கட்சியினர் ஊழல் செய்தால், நடுரோட்டில் வைத்து சாட்டையால் தண்டிக்கப்படுவார்கள் என்பது போன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ், தற்போது, பதவிக்கும், பவுசுக்கும் துடித்துக் கொண்டிருக்கிறார்.
வன்னியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்து, அவ்வின மக்களிடையே ஆசைகளை தூண்டும் வகையில் பேசி வந்த ராமதாஸ், 1980-ம் ஆண்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் இட ஒதுக்கீடு கோரி முதல் மாநாட்டை நடத்தினார்.
1984-ம் ஆண்டு சென்னை மெரினாவில் பட்டினிப் போராட்டம்,
1985-ல் சென்னையில் லட்சக்கணக்கானோருடன் பேரணி மற்றும் மாநாடு நடத்தி பரபரப்பை எற்படுத்தி.
1986-ல் மட்டும் பல்வேறு காலகட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பட்டை நாமப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம், ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் எனத் தொடர்ச்சியான பல போராட்டங்களை நடத்தினார்.
`கனல்’ என்ற இதழைத் தொடங்கி வன்னியர் சமூக மக்களிடையே அரசுக்கு எதிராக கோபத்தை தூண்டும் வகையில் எழுதியும் வந்தார்.
பின்னர், மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு, வன்னியர் சாதியினருக்கு மாநிலத்தில் 20% மத்தியில் 2% தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை 18% இருந்து 22% ஆக உயர்த்த வேண்டும்’’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, 17.9.1987 முதல் 23.9.1987 வரை ஒரு வாரம் தொடர் சாலைமறியல் போராட்டத்தை நடத்தினார்.
இந்த போராட்டத்தின்போது, வன்னியர் இன மக்களை தூண்டிவிட்டு நெடுஞ்சாலைகளை மரங்களை வெட்டி சாய்த்து, போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தார். (தற்போது பசுமை தாயம் என்ற பெயரில் அமைப்பை நடத்திவருகிறார்) ராமதாஸ் அறிவித்த இந்த போராட்டத்தால், வன்னியர் அதிகம் வசிக்கும் வட மாவட்டங்கள் போக்குவரத்தின்றி முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. இது மக்களிடையே ராமதாஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
ராமதாசின் தெளிவற்ற அறிவிப்பு காரணமாக, சுமார் ஒரு வாரம் நடந்த போராட்டத்தை ஒடுக்க, தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 21 அப்பாவி வன்னியர்கள் மரணமடைந்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், துப்பாக்கி சூட்டில், உயிரிழந்வர்களின் தியாகத்தை தனக்கு சாதமாக ராமதாஸ் பயன்படுத்திக்கொண்டார்.
அதன்பின்னர் 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதுத், அப்போதைய முதல்வர், கருணாநிதி, வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை `மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (MBC) என்ற புதிய பட்டியலில் இணைத்து 20% இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
இதன்பிறகே வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என மாற்றப்பட்டது. 1989ம் ஆண்டு ஜூலை 16ந்தேதி என்று, தனது அரசியல் ஆசைக்கு அடித்தளமிடும் வகையில், பாமக என அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது, அதிரடியாக பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “நான் வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். நானோ எனது குடும்ப உறுப்பினர்களோ கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டார்கள். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது, இவை என் இறுதிமூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்!” போன்ற உறுதிமொழிகளை வீசினார்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வராக வர வேண்டும் எனக் குரலெழுப்பினார். அவ்வப்போது அரசியல் ஸ்டண்டுகளை முன்னெடுத்து வந்தார். தலித்துகளுக்கு ஆதரவு என்று கூறிக்கொண்டே மற்றொரு புறம் தலித்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து வந்தார். தொடர்ந்து பதவிகளை பெறும் வகையில் தனது அரசியல் நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வந்தார்.
1989-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாமக முதன்முதலாக தனித்து போட்டியிட்டது. ஆனால், வெற்றி பெற முடியாவிட்டாலும் மக்களிடையே 6 சதவிகித வாக்குகளை பெற்றது. இது, மற்ற அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது. ஆனால், ராமதாசோ, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையிலேயே அடுத்தடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
பினனர், 1991ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் துர்மரணத்தால், மீண்டும் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 31 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது பா.ம.க. மீண்டும் பெருந்தோல்வி அடைந்தது. ஆனால், ராஜீவ் காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையே காரணம் என கூறப்பட்டது. ஆனால் ராமதாசின் நடவடிக்கை காரணமாகவே, வன்னியர் இன மக்களிடையே இருந்து வந்த செல்வாக்கு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., பண்ருட்டி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, 1996-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர், வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 15 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க அனைத்து இடங்களிலும் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
1996-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில், திவாரி காங்கிரஸ் உடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த பா.ம.க 116 இடங்களில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வென்றது
இந்த நிலையில்தான், 1998-ம் ஆண்டு, மத்தியில் இருந்த தேவகவுடா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாமக தனது அரசியல் நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றி, பதவி சுகத்துக்காக, அ.தி.மு.க – பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் வெற்றி பெற்றதால், பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலையை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக்கியது. அப்போதே கட்சிக்குள் பதவி கோதாவில் ராமதாஸ் குடும்பத்தினரும் குதித்தாக கூறப்பட்டது.
2001-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., 20 இடங்களில் வென்றது.
2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைந்தது. இந்த தேர்தலில், ராமதாஸ் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார். இந்த கூட்டணி வெற்றிபெற்றது. பாமக 6 இடங்களை கைப்பற்றியது. இதனால், தனது மகனுக்கு மத்தியஅமைச்சர் பதவி கேட்டு டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்து. (தனது பஞ்சோந்தி தனத்தை முதன்முறையாக வெளிப்படுத்தினார்.
காங்கிரஸ் கூட்டணி அரசில் பாமகவுக்கு பதவி கிடைத்தது. ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றார். தனது குடும்பத்தினர் அரசியலுக்கு வரமாட்டார்கள், பதவி சுகம் அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறியது அனைத்தும் பொய் என நிரூபணமானது. மேலும், ஒப்புக்கு சப்பானியாக பா.ம.க சார்பில் ஆர்.வேலு ரயில்வே துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
2006-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 34 இடங்களில் போட்டியிட்ட போட்டியிட்ட பா.ம.க., 18 இடங்களில் வென்றது.
பின்னர், 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க 3 இடங்களில் மட்டுமே வென்றது. அப்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். ஜெ.வையும் கடுமையாக விமர்சித்து வந்தார் ராமதாஸ். டயர் நக்கி என்று அருவருக்கும் வகையில் அவரது விமர்சனம் தரம் தாழ்ந்து இருந்தது.
2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து 8 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க., தருமபுரி தொகுதியில் மட்டும் வென்றது. அன்புமணி ராமதாஸ் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016-ம் ஆண்டு தேர்தலில், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் பா.ம.க தனித்துப் போட்டியிட்டது. மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக மக்கள் ராமதாசின் சுயரூபத்தை தெரிந்துகொண்டதால், அவரது கட்சியை அடியோடு ஒழித்துக்கட்டினர். தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.
2014 வெற்றியை நினைத்துக்கொண்டே 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இணைந்த பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களில் போட்டியிட்டது. தருமபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளரிடம் பெரும். தோல்வி அடைந்தார். ஆனால், கூட்டணி ஒப்பந்தப்படி அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவி பெற்று தனது அதிகாரப்பசியை போக்கிக்கொண்டார்.
ஜெ.மறைவுக்கு பிறகு, இடையிடையே அதிக தொகுதிகளை கேட்கும் வகையில், எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் அதிமுக ஆட்சி குறித்து அவ்வப்போது படு கேவலமாக விமர்சித்து வந்த பாமக, வேறு வழியின்றி, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
இந்த நிலையில்தான், தற்போது பாமக தலைவர் ராமதாஸ் மீண்டும் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று, எப்போதும் போல சுயரூபத்தை காட்டி உள்ளார்.
வன்னியர் சங்கம் தொடங்கி, பாமக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய டாக்டர் ராமதாஸின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்படுபவையாக இருந்தன. ஆனால், காலப்போக்கில், அவரது பதவி ஆசை, சுயநலம், குடும்ப செல்வாக்கு போன்றவைகளால், அவரது செயல்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்படத் தொடங்கின.
வன்னிய சமுதாய மக்களிடையே தான் பகிரங்கமாக அறிவித்த பதவி சுகம் என்ற கோட்பாட்டை மீறி, தனது மகன் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பா.ம.க இளைஞரணித் தலைவராகவும் ஆக்கினார். இது மட்டுமின்றி, . வன்னியர் கல்வி அறக்கட்டளையைத் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் சாவுக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானார். அதுமட்டுமின்றி, ராமதாசின் போராட்டம் காரணமாக உயிரிழந்த 21 பேரின் தியாங்களை, தனதுக்கு ஆதரவாக மாற்றிக்கொண்டார் என்று வன்னியர் இன மக்களின் தூற்றலுக்கு ஆளாகி உள்ளார்.
பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றோரின் செயல்பாடுகள் காரணமாக, டாக்டர் ராமதாஸ் சுயநலவாதி மட்டுமின்றி, ஒரு சந்தர்ப்பவாதி, இடத்துக்கு இடம் மாறும் பச்சோந்தி , தான் ஒரு அரசியல் வியாபாரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வநதுள்ளார்…. அவரது சுயரூபமும், சந்தர்ப்பவாதமும்தான் தற்போது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
தனது பெயருக்கு மாற்றம்: வன்னியர் அறக்கட்டளையை ‘ஸ்வாகா’ செய்த ராமதாஸ்!
அன்புமணியின் ஆணவப் பேச்சு: அதிமுக பாமக கூட்டணி விரைவில் டமால்…..?