சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு சார்பில் ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் இருப்பது உள்ளிட்ட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.
சிவாஜி மணிமண்டபத்தை நாளை துணை முதல்-வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார். இதையடுத்து மணிமண்டபத்தில் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அங்கு நிறுவப்பட்டுள்ள சிலைக்கு பாலிஷ் பூசி புது பொலிவூட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel