திருநெல்வேலி,

ந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இதன் காரணமாக அவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள்.

கந்துவட்டி காரணமாகவும், கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக போலீசார் டார்ச்சர் செய்ததாகவும் கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்துள்ளனர். ஆனால், மனு வாங்க தாமதமானதால், தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள , காசிதர்மம் என்ற பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து.  இவருக்கு சுப்புலட்சுமி (வயது 27)  என்ற மனைவியும், மது சரண்யா (வயது 4), பரணிகா (வயது 1) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

குடும்ப வறுமை காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். சுமாரி 1.44 லட்சம் கடனுக்க 2.35 லட்சம் பணம் செலுத்தியும் மேலும் பணம் கட்ட வேண்டும் என கந்துவட்டிக்காரர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கூறி உள்ளார். ஆனால், போலீசார் கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு, இசக்கிமுத்தையே கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6 முறை புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகம் இசக்கிமுத்து குடும்பத்தினர், தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தீயில் எரிவதை கண்டவர்கள் உடடினயாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறு குழந்தைகளும் தீயில் எரிந்தது மனதை பதபதக்கை  வைத்து.  அதைத்தொடர்ந்து அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு சென்ற நெல்லை கலெக்டர் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த சம்பவம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.