பாட்னா
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் வீடு முன்ப் காவல்துறையினர் குவிக்கப்பட்டுளதால் பரபரப்பு ஏற்பட்டுளது.
கடந்த ஜனவரி இறுதியில் பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை முறித்து கொண்ட நிதிஷ் குமார், மகா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் கைகோர்த்து 9-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்று அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் புதிய அரசை அமைத்துள்ளார் .
எனவே பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர்களில் ஒருவர் மற்றும் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவின், பாட்னா நகரில் உள்ள வீடு முன்பு நள்ளிரவில் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதையொட்டி அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அக்கட்சி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில்,
”நிதிஷ்குமார் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் தேஜஸ்வியின் வீட்டைச் சுற்றி அனைத்து பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஏதேனும் கூறி அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த விரும்புகின்றனர்.
இதனை பீகார் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் பயந்துபோய், குனிந்து செல்பவர்கள் அல்ல என நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் கொள்கைக்கான இந்த போராட்டத்தில் போராடி, வெல்வோம். காவல்துறையின் இந்த ஒடுக்குமுறையை, நீதியை விரும்பும் மக்கள் எதிர்ப்பார்கள்”
என்று தெரிவித்து உள்ளது.