சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை குற்றவாளிமீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின் கஸ்டடியில் இருக்கும்போது, குற்றவாளியால் எப்படி துப்பாக்கியால் சுட முடிந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி சத்தியபாண்டியை கடந்த மாதம் (பிப்ரவரி) 12ஆம் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் அரக்கோணம் நீதிமன்றத்திலும், சஞ்சய் ராஜா என்பவர் எழும்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து வழக்கு தொடர்ந்து, சஞ்சய் ராஜாவை கோவை அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின்போது, கரட்டுமடம் பகுதிக்கு , அவரை அழைத்துச் சென்ற போலீசார், சஞ்சய் ராஜா காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றார், அதனால், போலீசார் அவரை சுட்டு பிடித்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் பாதுகாப்பில் இருந்த கஞ்சய் ராஜாவுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினார். இது( சர்சசையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராஜாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கைது செய்யப்பட்டவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல” என்றார். மேலும், துப்பாக்கியால் சுடப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறி, அதற்கான புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, “தாமாக முன்வந்து சரணடைந்த பின்னர், ஒருவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. அவர் காவல்துறையினராலேயே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, அவரிடம் துப்பாக்கி எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பியவர், இந்த மனு விசாரணைக்கு உகந்தது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல் துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் போலீசாரால் சுடப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர், கூலிப்படை தலைவன் என கூறப்படுகிறது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுக்கி வைத்திருந்த ஒரு துப்பாக்கியையும், பறிமுதல் செய்த போலீசார், மேலும், கோவை சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக சஞ்சய் ராஜா கூறியைதால், அங்கு அழைத்துச் சென்றதாக கூறிய காவல்துறையில், அதை கைப்பற்ற சென்றபோது, அவர் துப்பாக்கியால் சுட முயன்றதாக காவல்துறையினர் கூறி உள்ளனர்.