டூவீலரில் 5 பேர் பயணம்!! வாகன ஓட்டியிடம் கும்பிடு போட்ட இன்ஸ்பெக்டர்

ஐதராபாத்:

பலமுறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிய்யை பார்த்த இன்ஸ்பெக்டர் அவருக்கு கும்பிடு போடும் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைராலாக பரவி வருகிறது.

ஐதராபாத் அருகே ஆனந்த்பூர் மாவட்டம் மடகாசிரா பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக சுகுப் குமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காவல் நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹனுமந்த்ரையா என்பவர் மோட்டார் சைக்கிளில் 6 பேருடன் வந்தார். ஹனுமந்த்ரையா இப்படி பயணிப்பது வாடிக்கை. இதற்காக சுகுப் குமார் அவருக்கு அடிக்கடி அபராதம் விதித்துதுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் மனைவி, 2 மகன், தாய் என பைக்கில் ஹனுமந்த்ரையா வருவதை கவனித்த இன்ஸ்பெக்டர் மனம் நொந்து அவரை பார்த்து கும்பிடு போட்டார். மீண்டும் மீண்டும் இது போன்று பயணிப்பது சாலை விதிமீறல் ஆகும் என வலியுறுத்தினார்.

இது ஹனுமந்த்ரையாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன ஓட்டியிடம் கும்பிடு போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
police inspector request two wheeler driver for riding with 5 persons