மும்பையில் பட்டாசு விற்பனைக்கு உயர்நீதிமன்றம் தடை

மும்பை:

தீபாவளி பண்டிகை வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மும்பை மாநகர், புறநகர் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் மும்பை குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கு வழங்கப்படும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதர பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்வதை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியை தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றமும் மும்பை பெருநகரின் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
high court stay crackers sales is mumbai