சென்னை

சீமானிடம் காவல்துறையினர் ஒரு மணி நேர்ம விசாரணை நடத்தி உள்ளனர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அவரிடம் வழக்கு தொடர்பாக சுமார் 63 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீமானிடம் சுமார் ஒரு நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு விசாரணை நிறைவடைந்தது.

விசாரணைக்கு பிறகு சீமான் செய்தியாளர்களிடம்,

“விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு அழைப்போம் என்று கூறினார். நான் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தேன்.

என் வீட்டில் சம்மன் ஒட்டியதோடு காவல்துறையின் வேலை முடிந்துவிட்டது. சம்மன் ஒட்டும்போது தடுத்திருந்தால் பணி செய்யவிடாமல் தடுப்பதாக கைது செய்திருக்கலாம். ஒட்டப்பட்ட சம்மனை நாங்கள் பார்த்த பிறகு கிழித்தோம். அது எப்படி குற்றமாகும்?

எங்கள் வீட்டிற்கு காவலாளி என்று யாரும் கிடையாது. என் வீட்டில் கைது செய்யப்பட்டவர் காவலாளி அல்ல. அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். என் மீது உள்ள அன்பு காரணமாக, எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பாசத்தின் காரணமாக வந்தவர்

எனத் தெரிவித்துள்ளார்.