மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பு  மற்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். அரசு மற்றும்காவல்துறையினரின் நடவடிக்கை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் கடவுள் முருகன் பெயரில் நடைபெற உள்ள மதுரை முருக பக்தர்கள்  மாநாடு குறித்து  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரம்தாழ்ந்தும், வரம்பு மீறியும்  பேசி வருவது  தென்மாவட்ட இந்து மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை வைத்து, திமுக அரசு அரசியல் செய்து, மக்களிடையே  பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்த நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், அமைச்சர் சேகர்பாபு மற்றும் காவல்துறையினரின் அதிகார மீறலுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  ஆனால், தனியார் இடத்தில் நடைபெறும்  மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர் இது இந்துக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. இது தென்மாவட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை எந்தவொரு மத நிகழ்வுகளுக்கும் இதுபோன்ற கெடுபிடிக்கள் விதிக்கப்படாத நிலையில், தமிழ் கடவுளான முருகன் பெயரில் நடைபெறும் மாநாட்டுக்கு ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்று சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு அத்துமீறி பேசி வருவது  திமுக அரசுமீதான அதிருப்தியை அதிகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்துமுன்னணி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம். அங்கு மாநாடு நடத்த சம்பந்தப்பட்டவரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு கட்சியினருக்கு மாநாடு மற்றும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கியை பயன்படுத்தவும் அனுமதி கோரி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், அறுபடை வீடுகள் மாதிரி அமைத்து வழிபாடு நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுத்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து, முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என  கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, மனுதாரர் தரப்பில், ‘ அரசபாண்டி என்பவர் இந்து முன்னணி அமைப்பு சார்பாக ஏற்கனவே அனுமதி கோரி அளித்த மனு தொடர்பாக, நேற்றுதான் 36 கேள்வி பதில்கள் கேட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பதில் அளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, ‘அறுபடை மாதிரிகளை வைத்து வழிபட ஆகம விதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர் அதற்கு ஆகம விதிகளின் படியே அறுபடை வீடுகளின் மாதிரைகளை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது. காலையும், மாலையும் 2 மணி நேரம் பூஜை நடத்தி, பிரசாதம் மட்டுமே வழங்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், ‘தொடர்ச்சியாக 12 நாட்கள் பூஜை மற்றும் தரிசனத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தினமும் 200-ல் இருந்து 300 நபர்கள் அப்பகுதியில் கூடுவதற்கான வாய்ப்புள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, ‘ இதே முறையிலேயே பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது அங்கு இதுபோல நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இங்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை? இது சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துமா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், ‘சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். அதோடு மனுதாரர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடமும் உரிய அனுமதியை பெற வேண்டும். அதற்கான அனுமதியை பெறவில்லை’ என தெரிவிக்கப்பட்டது. “முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 10 நாட்கள் முன்பிருந்து அறுபடை வீடுகளின் மாதிரி அமைப்புகள் அமைத்து வழிபாடு நடத்தினால், அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்

. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு பரிசீலனையில் உள்ளது. மாநாட்டுக்கு அனுமதி கோரிய மனு தொடர்பாக சில கேள்விகளுக்கு பதில் கேட்டுள்ளோம். அதற்கு, இப்போது வரை பதில் வரவில்லை. அந்த மனு மீது 9-ம் தேதிதான் முடிவெடுக்கப்படும். தற்போது அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக்கேய வெங்கடாஜலபதி வாதிடும்போது, “மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைத்து காலை, மாலையில் 2 மணி நேரம் வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க உள்ளோம். அதற்காக முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் தயாராக உள்ளன. மாநாட்டு வளாகத்துக்கு வந்த போலீஸார் அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைக்கக்கூடாது என பணியாளர்களை மிரட்டியுள்ளனர்” என்றார்.

அதையடுத்து, ‘காவல்துறையினர் நடுநிலையான அமைப்பாக செயல்பட வேண்டும். இது ஒரு ஜனநாயக நாடு’ என குறிப்பிட்ட நீதிபதி, “முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் ஏற்கெனவே பல மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தற்போது அனுமதி மறுப்பது ஏன்? அறுபடை வீடுகளின் மாதிரி அரங்கு அமைத்து வழிபாடு நடத்துவதற்கு அனுமதி மறுக்க போலீஸார் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.

போலீஸார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்படக்கூடாது. மனு குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  சிறப்புப் பூஜை நிகழ்ச்சிக்கு நிர்ப்பந்தத்தின் பேரில் போலீசார் அனுமதி மறுத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு அனுமதி கோரி மாநகர காவல்துறையிடம் இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதில், அறுபடை வீடு மாதிரி வடிவங்களில் காலை, மாலை நேரங்களில் நடைபெறும் சிறப்புப் பூஜையில் 200 பக்தர்கள் பங்கேற்க அனுமதி கேட்கப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்பதால் பூஜை நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், தனியார் இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு நிர்ப்பந்தத்தின் பேரில் போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி குற்றச்சாட்டியுள்ளது.

இந்த நிலையில்,   மதுரையில்  செய்தியளார்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், அரசு, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர். மாநாட்டுக்கு அனுமதி மறுத்தால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் நாளை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.  நாளை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். இரவு மதுரையில் தங்கும் அவர் நாளை காலை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்கிறார். மாலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

எம்ஜிஆர் மதுரையில்தான் முதல் கூட்டம் நடத்தினார். மதுரையில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் வெற்றி பெறும். இது மீனாட்சி ஆட்சி செய்யும் இடம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதனால்தான் மதுரையில் கூட்டம் நடத்தப்படுகிறது.

பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறார். பாமகவும் வரும். தேமுதிக வருகையை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம்.

பாமக விவகாரத்தில் குருமூர்த்தியை வைத்து பாஜக சமரசம் செய்யவில்லை. அவரது முயற்சிக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை.

குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்.

. டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த சோதனையில் பங்கேற்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டது, வழக்கமான நடைமுறைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

குலுங்கியது மதுரை: திருபரங்குன்றம் முருகன் மலையை பாதுகாக்க குவிந்த தென்மாவட்ட மக்கள்!

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் கையெழுத்து இயக்கம்! மலை பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு