சென்னை: திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்து இன்றைய சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வ ஸ்டாலின், விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று கூறினார்.

திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் பற்றி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது, கடந்த 29ஆம் தேதி திருவண்ணாமலை சம்பவம் தொடர்பாக, உடல் கூராய்வுக்கு பிறகு அறிக்கை தர உள்ளேன் என்று கூறியிருந்தேன். இந்த மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்றும், தங்கமணியை கைது செய்த காவல்துறையினர் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு விட்டனர். விசாரனை கைதி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடியின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்
[youtube-feed feed=1]