சென்னை:
மிழக காங்கிரஸ்  கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருமகன்
திருமகன்

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் எம்.ஜோதி, மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரனைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடைய மகன் இ.திருமகன் ஈ.வெ.ரா., காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை தலைவராக இருக்கிறார். அவருடைய புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.