இளம்பெண்ணுக்கு மிரட்டல்: உ.பி. மாநிலபாஜக எம்எல்ஏ பேரன் மீது போலீசார் வழக்கு பதிவு

Must read

லக்னோ:

.பி. மாநில பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் கோபிலால் ஜாதவ். இவரது பேரன் விவேக். சம்பவத்தன்று, அவர், இளம்பெண் ஒருவரின் வீடு முன்பு நின்று கொண்டு, அந்த பெண்ணை கொலை செய்துவிடுவதாக மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

உ.பி.மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு முடிந்து வீட்டு வந்தபிறகு, எம்எல்ஏ பேரன் விவேக், மாணவியின் வீடு முன்பு கையில் வாளுடன் நின்றுகொண்டு,  வீடு முன்பு  நின்றுகொண்டு, அந்த இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இந்த சம்பவம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே,  தீபாவளி  நேரத்தில் நடைபெற்றதாக வும், இதுகுறித்து காவல்துறையில் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article