நவீன தனுஷ் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு

Must read

கொல்கத்தா:

ஆர்டர் செய்து பெறப்பட்ட 6 நவீன பீரங்கிகள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.


114 நவீன தனுஷ் பீரங்கிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, அதில் 6 பீரங்கிகள் வந்து சேர்ந்தன. இந்த நவீன பீரங்கிகள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

பின்னர் அனைத்தும் பீரங்கி தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த பீரங்கிகள் நம் ராணுவத்துக்கு வலிமை சேர்க்கும் என்று மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனுஷ் என்று பெயரிடப்பட்ட இந்த நவீன பீரங்கி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களான செயில் மற்றும் பெல் நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

More articles

Latest article